உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வருவாய் ஆய்வாளர், தட்டச்சர் வி.ஏ.ஓ.,க்களுக்கு முன்ஊதிய உயர்வு பதவி உயர்வு அலுவலர்கள் வலியுறுத்தல்

வருவாய் ஆய்வாளர், தட்டச்சர் வி.ஏ.ஓ.,க்களுக்கு முன்ஊதிய உயர்வு பதவி உயர்வு அலுவலர்கள் வலியுறுத்தல்

மதுரை : 'வருவாய்த் துறையில் இளநிலை வருவாய் ஆய்வாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், வி.ஏ.ஓ.,க்களுக்கு பதவி உயர்வின் போது முன்ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும்' என தமிழ்நாடு வருவாய்த்துறை பதவி உயர்வு அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.மாநில பொதுச் செயலாளர் ஆர்.ஜெயகணேஷ், வருவாய் நிர்வாக ஆணையர் அமுதாவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அமைச்சுப் பணியின் கீழ் வருவாய்த் துறையில் பணியமர்த்தப்படும் இளநிலை வருவாய் ஆய்வாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர்கள் 2020 மார்ச்சுக்கு முன் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி உயர்வுக்கு உட்படுத்தும்போது, ஒருமுன் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. அந்தத் தேதிக்கு பின்னர் இந்த ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டது. அவர்கள் மேற்கண்ட தேதிக்கு முன் அவர்கள் கணக்கு தேர்வில் பாகம் 1 தேர்ச்சி பெற்றிருந்தால் ஊதிய உயர்வு வழங்கி, 31.3.2021க்குள் காலக்கெடுவுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது. இதன்படி முதுநிலை வருவாய் ஆய்வாளராக 10.3.2020க்கு முன் பதவி உயர்வு பெற்ற அலுவலர்களுக்கு முன்ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. ஆனால் இந்த உத்தரவை மதுரை, திண்டுக்கல், தஞ்சாவூர், ஈரோடு, விழுப்புரம், செங்கல்பட்டு உள்பட சில மாவட்டங்களில் ஒப்புதல் அளிக்காமல் மறுத்து வருகின்றனர். இதற்கான தணிக்கை மறுப்பு குறிப்பில், 'சார்நிலை அலுவலர்களுக்கான கணக்கு தேர்வு பாகம் 1 ல் தேர்ச்சி பெற்றமைக்கான அரசின் இசைவை பெற்ற தனிநபரின் பெயரோடு கூடிய ஆணையை சமர்ப்பிக்கவும் எனக்கூறி வருகின்றனர். இதை தவிர்த்து அனைவருக்கும் முன்ஊதிய உயர்வு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில் ''இக்கோரிக்கை நிறைவேறாதபட்சத்தில் மாநில அளவில் போராட்டம் நடத்த உள்ளோம்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

P.Sekaran
செப் 09, 2024 10:27

சம்பள உயர்வு கொடுத்தால் மட்டும் இவர்கள் வாங்கும் கிம்பளத்தை குறைத்துக்கொள்வார்களா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை