உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 34 ஆண்டுக்குப்பின் புரவி எடுப்பு விழா

34 ஆண்டுக்குப்பின் புரவி எடுப்பு விழா

பாலமேடு: பாலமேடு அருகே வெ.பெரியகுளத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தில் அய்யனார் கோயில் உள்ளது. பாறைப்பட்டி, சரந்தாங்கி, வெள்ளையம்பட்டி, மாணிக்கம்பட்டி கிராம அனைத்து சமுதாய மக்களும் வழிபடுகின்றனர். இக்கோயில் புரவி எடுப்பு விழா 34 ஆண்டுகளுக்குப் பின் வரும் செப். 6, 7 ஆகிய 2 நாட்கள் நடத்த அதிகாரிகள், கிராம மக்கள் பங்கேற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதற்கான பிடி மண் கொடுக்கும் நிகழ்வு ஜூலை 10ல் நடந்தது. தற்போது சிலைகள் செய்து வெ.பெரியகுளம் குதிரைப் புலி எனும் இடத்தில் நேற்று சூளை (மண்கலம் சுடும் சூளை) வைக்கப்பட்டது. தக்கார் இளமதி, சரக ஆய்வாளர் சாவித்திரி முன்னிலையில் கோயில் பூஜாரி தவமணி பூஜைகள் செய்தார். கிடா வெட்டி வழிபாடு செய்தனர். ஐந்து கிராம மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை