உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் ஆசிரியர் மீது தாக்குதல்

மதுரையில் ஆசிரியர் மீது தாக்குதல்

மதுரை ; மதுரையில் திருமண விவகாரத்தில் அரசு பாலிடெக்னிக் ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.மதுரை ஆண்டாள்புரம் வெங்கடேஸ்வரன் 50. அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி ஆசிரியராக உள்ளார். நேற்று அதிகாலை 5:30 மணிக்கு யோகா வகுப்புக்கு சென்றார். பாலிடெக்னிக் எதிரே வந்த போது வழிமறித்த 4 பேர் அவரை கடுமையாக தாக்கியதில் மயக்கமடைந்தார். தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். ஜெய்ஹிந்த்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.விசாரணையில் வெங்கடேஸ்வரன் சகோதரரான திருச்சி மின்அமலாக்கத்துறை அதிகாரி கொண்டல்ராஜ் மகனுடைய விவாகரத்து வழக்கில் சகோதரர் தரப்பிற்கு ஆதரவாக இருப்பதால் தாக்கப்பட்டது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை