| ADDED : மே 20, 2024 12:01 AM
திருமங்கலம் : நவீன தொழில் நுட்பங்கள் வளர வளர அதில் பல்வேறு யுக்திகளை பயன்படுத்தி, பணம் பறிப்பது உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபடுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.சில நாட்களாக ஆன்ட்ராய்டு போன்களில் 'வாட்ஸ் ஆப்' வைத்திருப்பவர்களின் மொபைல் எண்ணிற்கு சம்பந்தம் இல்லாமல் எலக் ஷன். ஏ.பி.கே., மற்றும் பல்வேறு சேவைகள் தொடர்பாக அறிவிப்பது போல் ஏ.பி.கே., என முடியும் லிங்குகளை சிலர் அனுப்பி வருகின்றனர்.வாட்ஸ்ஆப் வைத்திருப்பவர் ஒரு ஆர்வத்தில் இந்த லிங்குகளை தொடும்போது மொபைல் போனில் உள்ள வங்கி தொடர்பான விவரம் உட்பட மொத்த டேட்டாவும் திருடப்படுகிறது. மொபைல் போனில் பாஸ்வேர்ட் போன்றவற்றை பதிவு செய்து வைத்திருக்கும் போது அந்த விவரங்களையும் மர்ம நபர்கள் திருடிவிடுகின்றனர்.இந்த லிங்கை தொட்டவுடன் மொபைல் போன் மொத்தமாக செயல்படாமல் ஹேங்க் ஆகிவிடுகிறது. இதன் மூலம் வங்கி கணக்கில் இருந்து பணம், மொபைல் போன்களில் உள்ள போட்டோ உள்ளிட்ட ரகசிய தகவல்களையும் திருடிக் கொள்கின்றனர்.இது குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறியதாவது:இது போன்ற லிங்குகள் வந்தால் அதை யாரும் 'கிளிக்' செய்ய வேண்டாம். இலவச பரிசுகள், கூப்பன்கள் என பிரபல நிறுவனங்களின் பெயர்களில் பல்வேறு வாட்ஸ் அப் குழுக்களிலும், தனிப்பட்ட எண்களிலும் இருந்து வரும் லிங்குகளையும் கிளிக் செய்ய வேண்டாம்.இதுபோன்ற மெசேஜ்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட வேண்டும். தெரியாத நபர்களிடம் இருந்து வரும்போது அந்த நம்பர்களை உடனடியாக வாட்ஸ் ஆப் செயலிலேயே ரிப்போர்ட் செய்துவிடலாம். அந்த நம்பரை பிளாக் லிஸ்டில் சேர்த்து விட வேண்டும். இவ்வாறு செய்யும்போது அந்த நபர்கள் மீது தொடர்ந்து புகார் வரும் பட்சத்தில் வேறு யாருக்கும் அவர்கள் வாட்ஸ் ஆப் செயலி மூலம் லிங்குகளை அனுப்புவதும் தடை செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே தொழில் நுட்பங்களை சரியாக புரிந்து செயல்படுத்த வேண்டும் என்றனர்.