உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சிலம்பத்தில் உலக சாதனை முயற்சி

சிலம்பத்தில் உலக சாதனை முயற்சி

திருமங்கலம் : திருமங்கலத்தில் சோழன் உலக சாதனை புத்தகம், லீ சாம்பியன் மார்ஷியல் ஆர்ட்ஸ் இணைந்து சிலம்பத்தில் புதிய உலக சாதனை முயற்சி அல்அமீன் பள்ளியில் நடந்தது.உலக சோடோகான் கராத்தே அமைப்பின் தமிழ்நாடு செயலாளர் பால்பாண்டி தலைமை வகித்தார். சாதனை புத்தகம் நீலமேகம் நிமலன் முன்னிலை வகித்தார். இந்திய சிலம்ப பள்ளியின் தலைமை பயிற்சியாளர் மணி துவக்கி வைத்தார்.7ம் வகுப்பு மாணவன் ஜெகத்கிஷோர் முழங்காலை மடக்கி சிலம்பம் சுற்றியும், 6ம் வகுப்பு மாணவன் அருள்மாறன் கால்கள், கண்களை கட்டிகொண்டு இரட்டை கம்பு வைத்து சிலம்பம் சுற்றியும், 9ம் வகுப்பு மாணவி தீபிகா வீரபத்திர ஆசன நிலையில் இரட்டை கம்பு வைத்து சிலம்பம் சுற்றியும் சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். இவர்களுடன் மாணவி முத்துமீனாட்சி 15 ஆசனங்களை தொடர்ந்து செய்தார். மாணவர்களுக்கு கேடயம், சான்றிதழ்களை தலைமை செயற்குழு உறுப்பினர் தினேஷ்குமார் வழங்கினார். மாணவர்களை மாவட்ட சிலம்பத்தலைவர் கணேசன், புத்தக நிறுவனத்தின் மாவட்ட தலைவர் சண்முகவேல், அல்அமீன் பள்ளி செயலாளர் ராஜாரகீம், தலைமையாசிரியர் லதா, நர்சரி பள்ளி முதல்வர் மேரி உள்ளிட்ட பலர் பாராட்டினர். கராத்தே அமைப்பின் பொருளாளர் விக்னேஷ்வரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி