உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பஸ் ஸ்டாப்பில் ஆட்டோக்கள்

பஸ் ஸ்டாப்பில் ஆட்டோக்கள்

அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் கேட் கடை பாலமேடு ரோட்டில் பஸ் ஸ்டாப் நிழற்குடை முன் நிறுத்தப்படும் ஆட்டோக்களால் பயணிகள் அவதிப்படுகின்றனர். இந்த பஸ் ஸ்டாப்பில் பாலமேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள் நின்று செல்கின்றன.இங்கு அதிகளவில் நிறுத்தப்படும் ஷேர் ஆட்டோக்களால் பயணிகளுக்கு மட்டுமின்றி, போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. ஆட்டோ டிரைவர்கள் நிழற்குடையை ஆக்கிரமித்துள்ளதால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் வெயில், மழையில் நிற்கும் நிலை உள்ளது.பயணிகளை ஏற்ற ஆட்டோக்கள் ஸ்டாப்பை மறித்து ரோடு வரை நிறுத்தப்படுகின்றன. விபத்து ஏற்படும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை போலீசார் எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை