உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாசி வீதிகளில் பா.ஜ., பிரசாரம்

மாசி வீதிகளில் பா.ஜ., பிரசாரம்

மதுரை: மதுரை தொகுதி பா.ஜ., வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசன் நேற்று தேர்தல் பிரசாரத்தை துவக்கினார்.மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முன்பு பிரசாரத்தை துவக்கிய ராமஸ்ரீனிவாசன் பேசுகையில், ''இத்தனை ஆண்டுகளாக தி.மு.க., அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளித்த நீங்கள், இப்போது மீனாட்சி அம்மனுக்கு ஓட்டளித்து பொற்றாமரை மலர்வது போல, தாமரை மலர ஓட்டு அளியுங்கள்'' என்றார். மாலையில் மொட்டைப் பிள்ளையார் கோயில் அருகே மதநல்லிணக்க நோன்பை திறந்து வைத்தார். அவருடன் சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம், நகர பா.ஜ., தலைவர் மகாசுசீந்திரன், துணைத் தலைவர்கள் வினோத் ஜனா முருகன், பொதுச் செயலாளர் கருடகிருஷ்ணன்,ஊடகபிரிவு வேல்பாண்டியன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி