வந்தேபாரத் ரயில்களை வரவேற்கும் பா.ஜ.,
மதுரை : சென்னை - நாகர்கோவில், மதுரை - பெங்களூரு வந்தே பாரத் புதிய ரயில்களை வீடியோகான்பரன்சிங் மூலம் இன்று(ஆக.,31) பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். மதுரையில் இந்த ரயில்களுக்கு வரவேற்பு, வழியனுப்ப கட்சி சார்பில் நிர்வாகிகளை பா.ஜ., அறிவித்துள்ளது.மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன், துணைத் தலைவர்கள் வி.பி.துரைசாமி, ராமலிங்கம், பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலிநரசிங்கபெருமாள், தேசிய குழு உறுப்பினர் மகாலட்சுமி, அமைப்புக்குழு உறுப்பினர் எம்.எஸ்.ஷா, மாவட்ட அளவில் பார்வையாளர்கள் ராஜரத்தினம், கார்த்திக்பிரபு, தலைவர்கள் மகாசுசீந்திரன், சசிகுமார், ராஜசிம்மன், மாநில செயற்குழு உறுப்பினர் கே.கே.ஸ்ரீநிவாசன், தகவல் தொழில் நுட்ப பிரிவு மாநில துணைத் தலைவர் விஷ்ணுபிரசாத் குழுவினர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பர்.