உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / புத்தகம் வழங்கும் விழா

புத்தகம் வழங்கும் விழா

மதுரை ; உலக புத்தக தினத்தை முன்னிட்டு மதுரை சுப்பராமன் நினைவு உறைவிட ஆரம்பப் பள்ளியில் சிறுவர்களுக்கு புத்தகம் வழங்கும் விழா நடந்தது.கிரேசியஸ் தலைமை வகித்தார். சமூக ஆர்வலர்கள் ஷேக் மஸ்தான், நுாருல்லாஹ் சிறுவர்களுக்கு தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, பழமொழி விளக்கம், உடற்பயிற்சியின் பயன்கள், திருக்குறள் கதைகள், அறிவியல் அறிஞர்கள், பொன்மொழிகள் புத்தகங்களை வழங்கினர்.புத்தக வாசிப்பின் நோக்கம், வாசிப்பினால் ஏற்படும் நன்மைகளை எடுத்துக் கூறினர். சிறுவர்கள் கோடை விடுமுறையை புத்தகங்களுடன் கொண்டாடுவோம் என உறுதிமொழி எடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை