உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

திருமங்கலம், : பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம் 2024 -25 ஆம் ஆண்டு காரீப் பருவத்திற்கு தற்போது செயல்படுத்தப்படுகிறது.இதில் நிலக்கடலைக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 530, மக்காச்சோளத்திற்கு ரூ. 508, பருத்தி ரூ. 200, பச்சைப் பயிருக்கு ரூ. 308 காப்பீடு பிரீமியமாக விவசாயிகள் செலுத்த வேண்டும். நிலக்கடலைக்கு செப்.16 கடைசி நாள், மக்காச்சோளம் 1, பருத்தி 1, பச்சை பயிருக்கு செப்.30-ம் தேதிக்குள்ளும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும்.பயிர் கடன் பெற்ற விவசாயிகள் சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும், இதர விவசாயிகள் பொது சேவை மையங்கள், அரசு அங்கீகாரம் பெற்ற இ சேவை மையங்களிலும் காப்பீடு செய்து கொள்ளலாம். காப்பீடு செய்ய வி.ஏ.ஓ., வழங்கும் அடங்கல், சிட்டா, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன், பிரீமிய தொகையை செலுத்தி காப்பீடு செய்யலாம் என உதவி இயக்குனர் மயில் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி