உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பள்ளிகளில் சேர்க்கை கொண்டாட்டம்; சி.இ.ஓ., உத்தரவு

பள்ளிகளில் சேர்க்கை கொண்டாட்டம்; சி.இ.ஓ., உத்தரவு

மதுரை: மதுரையில் அனைத்து பள்ளிகளிலும் சேர்க்கை கொண்டாட்டம் நிகழ்ச்சி நடத்த முதன்மை கல்வி அதிகாரி (சி.இ.ஓ.,)கார்த்திகா உத்தரவிட்டுள்ளார்.அவர் கூறியதாவது: ஜூன் 10ல் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் வகுப்பறை பாதுகாப்பு, வளாக சுகாதாரம்குறித்து தலைமையாசிரியர்கள் முன்கூட்டியே உறுதிசெய்ய வேண்டும். மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் பாடப் புத்தகங்கள், நோட்டுகள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளன. பள்ளிப் பாதுகாப்பு வளாகத் துாய்மை குறித்து தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.பள்ளி திறந்த முதல் நாளில் இருந்தே அரசு, உதவிபெறும் பள்ளிகளில் சேர்க்கை கொண்டாட்டம்நிகழ்ச்சி நடத்தவும், தொடக்க பள்ளிகளில் முதல் வகுப்பு சேர்க்கையை 100 சதவீதம் மேற்கொள்ளவும் உத்தரவிட வேண்டும். பள்ளி பகுதிகளில் பள்ளி செல்லும் வயதுஉடைய அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்கவும், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் 9ம் வகுப்பு சேர்ந்துள்ளனரா என்பதையும் தலைமையாசிரியர்கள்உரிய ஆய்வு செய்ய வேண்டும். 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் பாடங்கள் குறித்து 'பிரிட்ஜ் கோர்ஸ்' நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான சிறப்பு கையேடுகளும் தயார் நிலையில் உள்ளன என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை