உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு

மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு

திருமங்கலம்: திருமங்கலம் அரசு மருத்துவமனையில் கலெக்டர் சங்கீதா நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.தியாகி விஸ்வநாததாஸ் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள திருமங்கலம் வந்த கலெக்டர் சங்கீதா, விழா முடிந்தபின் இங்குள்ள அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவசர சிகிச்சை பிரிவிற்கு கலெக்டர் சென்றபோது அங்கு டாக்டர்கள் பணியில் இல்லை. இதையடுத்து ஓய்வு அறையில் இருந்த டாக்டர்கள் அழைத்து வரப்பட்டனர். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை காக்க வைக்க கூடாது என டாக்டர்களுக்கு அறிவுரை கூறினார்.பிரசவ வார்டில் நோயாளிகளிடம் கலெக்டர் விசாரித்த போது மருந்து மாத்திரைகள் பற்றாக்குறையாக இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து பற்றாக்குறை இன்றி, மதுரை அரசு மருத்துவமனையில் கேட்டு பெற்று நோயாளிகளுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !