சமுதாய வளைகாப்பு
பேரையூர்: பேரையூரில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பாக 103 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா தி.மு.க., மாணவரணி மாவட்ட அமைப்பாளர் பாண்டிமுருகன் தலைமையில் நடந்தது. பேரூராட்சி தலைவர்குருசாமி, துணைத் தலைவர் பிரியதர்ஷினி, தி.மு.க., நகர் செயலாளர் வருசைமுகமது, ஒன்றிய செயலாளர் தனசேகரன், நிர்வாகிகள் சாதிக், மணிகண்டன், முருகன் பங்கேற்றனர்.