உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அறுவடைக்கு தயாராக சோளம்

அறுவடைக்கு தயாராக சோளம்

பேரையூர் : பேரையூர் பகுதியில் கடந்த ஜனவரியில் (தை மாதம்) பயிரிட்ட சோளம் தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது.அப்போது பெய்த மழையால் பயிரிட்ட சோளம் நன்கு வளர்ந்து நல்ல விளைச்சலை கண்டுள்ளது. நீர் பாய்ச்ச வேண்டிய கட்டாயம் இல்லாத பயிராக உள்ளதால், இப்பகுதியில் பெரும்பாலான மானாவாரி நிலங்களில் இது சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மூன்று மாத பயிரான சோளம், அவ்வப்போது மழை பெய்ததால் இந்த ஆண்டு நல்ல விளைச்சலை கண்டுள்ளது. அதேபோல விலையும் நன்றாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக'' விவசாயிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி