கைவினைக் கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம்
மதுரை : மதுரை மாவட்ட தொழில் மையத்தில் கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் கைவினைக் கலைகளில் ஈடுபட்டுள்ள 35 வயதுக்குட்பட்டோர் சுயதொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்.பொது மேலாளர் கணேசன் கூறியதாவது: கட்டட, மர வேலை, பாரம்பரிய முறையில் ஜவுளி அச்சிடுதல், தோல் கைவினைப்பொருட்கள், காலணிகள், மீன்வலை தயாரித்தல், நகை செய்தல், சிகையலங்காரம், அழகுக்கலை, துணி நெய்தல், சுதை, சிற்ப, கற்சிலை, கண்ணாடி, உலோகம், பாசிமணி வேலைப்பாடு, பூட்டு தயாரித்தல், தையல், கூடை, கயிறு, பாய் பின்னுதல், மண்பாண்டம், சுடுமண் பொம்மை தயாரித்தல், மூங்கில், பிரம்பு, சணல், பனை ஓலை வேலைப்பாடு தொழில் செய்வதற்கு ரூ.3 லட்சம் வரை பிணையமற்ற கடன் வழங்கப்படுகிறது. இதற்கு ரூ.50 ஆயிரம் வரை மானியம் கிடைக்கும். 5 சதவீத வட்டி மானியம் உண்டு. திறன் மேம்பாட்டிற்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.35 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆதார் அட்டை, வங்கி கணக்கு விவரம், அலைபேசி எண், விலைப்பட்டியல், நலவாரிய அட்டையுடன் மாவட்ட தொழில் மையத்தை அணுகலாம் என்றார்.