உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அ.தி.மு.க., வேட்பாளருக்கு சி.டபிள்யூ.பி., ஆதரவு

அ.தி.மு.க., வேட்பாளருக்கு சி.டபிள்யூ.பி., ஆதரவு

மதுரை : மதுரை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் டாக்டர் சரவணனின் பிரசார நிகழ்வின் ஒரு பகுதியாக, 'கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பார்ட்டி'யின் தென்னிந்திய பொதுச் செயலாளர் ஆனந்தன் எழுதிய புத்தகம் வெளியிடப்பட்டது. நகர் செயலாளர் செல்லுார் ராஜூ வெளியிட, வேட்பாளர் சரவணன் பெற்றுக் கொண்டார். ஆனந்தன் பேசுகையில், ''தி.மு.க., ஆட்சியில் தொழிலாளர்களுக்கு பல்வேறு தீங்குகளை இழைத்திருக்கிறது. பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டுவரப்படும் என்றார்கள். அதை நம்பி அரசு ஊழியர்கள் ஓட்டளித்தனர். ஆட்சிக்கு வந்தபின் தொழிலாளர்களை தி.மு.க., ஏமாற்றிவிட்டது. நாங்கள் அ.தி.மு.க.,வை ஆதரிப்பது காலத்தின் கட்டாயம். எங்களுக்கு பல தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ