உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குப்பையை எரிப்பதால் பாதிப்பு

குப்பையை எரிப்பதால் பாதிப்பு

அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் ஒன்றியம் அய்யங்கோட்டை ஊராட்சி மதுரை- - திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் உள்ளது. இங்குள்ள வீடுகளில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக், பாலிதீன் குப்பை, கோழி இறைச்சி கழிவுகள் இருபுறமும் உள்ள சர்வீஸ் ரோடு, மயானம் மற்றும் கண்மாய் கரைகளில் ஆங்காங்கே கொட்டி எரிக்கப்படுகிறது. இதனால் காற்று மாசுபடுகிறது, எரிப்பதால் ஏற்படும் புகை மண்டலத்தால் விபத்து அபாயம் உள்ளது. இப்பகுதியில் எரிந்த பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிடும் கால்நடைகள் பாதிக்கின்றன.அதேபோல் நகரி - சோழவந்தான் ரோட்டில் உள்ள தனியார் நிறுவனங்களும் தங்கள் பங்கிற்கு ஆயில் பிளாஸ்டிக் கழிவுகள், ரப்பர்களை ராயபுரம் உள்ளிட்ட கண்மாய் பகுதிகளில் கொட்டி எரிக்கின்றனர். மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் குப்பை எரிக்கும் ஊராட்சி மற்றும் தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்