உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை மத்திய சிறையை வேறு இடத்திற்கு மாற்ற முடிவு உயர்நீதிமன்றத்தில் தகவல்

மதுரை மத்திய சிறையை வேறு இடத்திற்கு மாற்ற முடிவு உயர்நீதிமன்றத்தில் தகவல்

மதுரை: மதுரை மத்திய சிறையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை கோரிய வழக்கில்,'மேலுார் தெற்குத் தெருவிலுள்ள நிலத்தை சிறைத்துறை நிர்வாகம் பயன்படுத்த அனுமதிக்குமாறு வருவாய்த்துறைக்கு நில நிர்வாக கமிஷனர் பரிந்துரைத்துள்ளார்.அதன்படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும்' என தமிழக அரசு தரப்பு தெரிவித்ததை பதிவு செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பைசல் செய்தது.மதுரை புதுார் ராஜா தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை மத்திய சிறையில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலுார் அருகே இடையபட்டியில் சிறையை இடமாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அங்கு கடம்ப மரங்கள் அதிகம் உள்ளதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வாடிப்பட்டி அருகே தெத்துார் மற்றும் கரடிக்கல் இடையே மத்திய சிறை அமைக்க மாவட்ட நிர்வாகம் இடத்தை அடையாளம் கண்டது. அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.மாற்று இடத்தை தேர்வு செய்து புதிய மத்திய சிறை வளாகம் அமைக்கக்கோரி தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு விசாரித்தது.அரசு தரப்பு: மேலுார் தெற்குத் தெருவில் குறிப்பிட்ட சர்வே எண்ணிலுள்ள தடைசெய்யப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட நிலத்தை சிறைத்துறை நிர்வாகம் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்குமாறு வருவாய்த்துறைக்கு நில நிர்வாக கமிஷனர் பரிந்துரைத்துள்ளார். அதனடிப்படையில் மேல்நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்தது.இதை பதிவு செய்த நீதிபதிகள்: இதில் 3 மாதங்களில் முன்னேற்றம் இல்லையெனில் வழக்கை மீண்டும் நடத்த உரிமை கோரி மனுதாரர் இந்நீதிமன்றத்தை நாடலாம். வழக்கு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

God yes Godyes
செப் 10, 2024 07:32

தமிழகத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் முதியோர் இல்லம் அமைக்க வேண்டும்.அம்மா உணவு இல்லங்களை அவைகளுடன் இணைத்து முதியோருக்கு உணவு வழங்கல் பொறுப்பை மாற்றி அளிக்கலாம். முதியோர் இல்லங்களில் உணவு சமைக்க தேவை இல்லை.


புதிய வீடியோ