மேலும் செய்திகள்
பணம் இரட்டிப்பு மோசடி வழக்கில் காரைக்குடி கவுன்சிலர் கைது
21 hour(s) ago
நெல்லைக்கு சிறப்பு ரயில்
21 hour(s) ago
ரயில்வே ஆலோசனை குழுவுக்கு கவுரவ ஊதியம்
21 hour(s) ago
மதுரை:''போராடும் ஆசிரியர்களை போலீசார் கைது செய்வது ஜனநாயக விரோத செயல். டிட்டோ ஜாக் நிர்வாகிகளை அழைத்துப் பேசி தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என அரசு ஊழியர் சங்கம் வலியறுத்தி உள்ளது.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் (பொ) டானியல் ஜெயசிங், பொதுச் செயலாளர் செல்வம் கூறியிருப்பதாவது:டிட்டோ ஜாக் சார்பில் 31 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 4 நாட்களாக டி.பி.ஐ., வளாகத்தில் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதற்காக 13 மாவட்ட ஆசிரியர்கள் சென்னை வரும்போது கைது செய்யப்பட்டனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.இப்போராட்டத்தின் முக்கிய கோரிக்கை, 90 சதவீத ஆசிரியர்களை பாதிக்கும் அரசாணை எண் 243 ஐ ரத்து செய்ய வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்பதே. இதை வலியுறுத்தி, போராடும் ஆசிரியர்களை கைது செய்வதை அரசு கைவிட வேண்டும்.ஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது, தி.மு.க., தலைமையிலான ஆட்சியில் உங்கள் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என முதல்வர் ஸ்டாலின் சொன்னது நினைவில் உள்ளது. எனவே பல்வேறு காலகட்டத்தில் இயக்கம் நடத்தி, அமைச்சருடன் பேச்சு நடத்தி, கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் ஜனநாயக போராட்டம் நடக்கிறது. அவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு பதிலாக போலீசார் கைது செய்கின்றனர். அதுமட்டுமின்றி, ஆசிரியர் சங்க வட்ட, மாவட்ட, மாநில நிர்வாகிகளை வீட்டுக்காவலில் கைது செய்ததை, ஜனநாயக விரோத செயலாகவே பார்க்கிறோம். எனவே டிட்டோ ஜாக் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி முதல்வர் தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.திருச்சியில் சிறைவைப்பு
திருச்சி மாவட்டம் முசிறியில் இருந்து
டிட்டோஜாக் அமைப்பினர், சென்னையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக,
நேற்று முன்தினம் இரவு புறப்பட்டனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜ்
மற்றும் காரில் சென்னை செல்ல முயன்ற நான்கு பெண் ஆசிரியைகள், தனியார் ஆம்னி
பஸ்சில் சென்ற இரண்டு பெண் ஆசிரியைகள் உள்பட ஏழு பேரை, திருச்சியிலேயே,
முசிறி போலீசார் தடுத்து நிறுத்தினர்.தொடர்ந்த, ஆறு பெண்
ஆசிரியைகளை போராட்டத்துக்கு செல்லவிடாமல் தடுத்து, திருப்பி அனுப்பினர்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜை வீட்டு காவலில் வைத்தனர்.2,000 பேர் லீவ்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கோவை மாவட்ட செயலர் வீராசாமி கூறுகையில், “கோவை மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள ஆசிரியர் சங்க நிர்வாகிகளை போராட்டத்தில் பங்கேற்க விடாமல், போலீசார் வீட்டிற்கே சென்று கைது செய்து வருகின்றனர். கோவையில் இருந்து 2,000 ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து, சென்னையில் முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்,” என்றார்.
21 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago