உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கோயில் அருகே கும்மாளமிடும் குடிமகன்கள்

கோயில் அருகே கும்மாளமிடும் குடிமகன்கள்

மேலுார் : மேலுார் கஸ்துாரிபாய் நகரில் சிவன் கோயில் இடத்தில் குடிமகன்கள் தொந்தரவால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.இந்நகரின் 2 வது தெருவில் குடியிருப்புகளுக்கு மத்தியில் சிவன் கோயில் பொட்டல் உள்ளது. இவ்விடத்தை சுற்றி வெற்றி விநாயகர் கோயில், ரேஷன் கடை, குடியிருப்புகள் உள்ளன. இதை குடிமகன்கள் பாராக பயன்படுத்தி வருகின்றனர்.அப்பகுதி மக்கள் கூறியதாவது: இவ்விடத்தில் இரவு, பகலாக குடிமகன்கள் மது, கஞ்சா உபயோகப்படுத்துகின்றனர். போதை தலைக்கேறிய நிலையில் அருவெறுக்க தகுந்த வார்த்தைகளால் பேசுகின்றனர். மது பாட்டில்களை நொறுக்குவதால் நடந்து செல்வோருக்கு காயம் ஏற்படுகிறது. இங்குள்ள வெற்றி விநாயகர் கோயிலுக்கு வருவதற்கே அச்சமாக உள்ளது.மது அருந்த இடையூறாக இருப்பதாக கருதி தெருவிளக்குகளை உடைக்கின்றனர். சிவன் கோயிலில் அம்புவிடும் நிகழ்வு நடக்கும் இடத்தில் மது அருந்துவது வேதனையாக உள்ளது. ரேஷன் கடைக்கும் செல்ல முடியாமல் அவதிப்படுகிறோம். மொத்தத்தில் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கிறோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி