மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம்
மதுரை : மதுரையில் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு வழங்கவும், திறன்களை மேம்படுத்த பல்வேறு தொழில் பயிற்சிகளை இலவசமாக வழங்கவும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளதாவது: மாவட்டத்தில் செயல்படும் தனியார் நிறுவனங்கள் சமூகப் பொறுப்புணர்வுடன் மாற்றுத் திறனாளிகள் பணிபுரிய ஏதுவாக தங்கள் நிறுவனங்களில் காலிப் பணியிடங்களை கண்டறிந்து அவர்களுக்கு பணி வாய்ப்பு வழங்க வேண்டும். தனியார் பணி, திறன் மேம்பாட்டு பயிற்சி தேவைப்படும் மாற்றுத் திறனாளிகள் 87789 45248ல் தங்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.