| ADDED : ஜூலை 31, 2024 11:23 PM
மதுரை:தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் வேளாண் பொறியியல் துறை மூலம் மதுரையில் வேளாண் இயந்திரங்கள் பயிற்றுநர் மற்றும் டிராக்டர், அறுவடை டிராக்டர் ஆப்பரேட்டர் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி வகுப்புக்கு 25 பேர் அனுமதிக்கப்படுவர். குறைந்தது பிளஸ் 2 தேர்ச்சி அல்லது டிப்ளமோ, ஐ.டி.ஐ., டிகிரி தேர்ச்சி பெற்ற 45 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்கலாம். மதுரை ஒத்தகடை விவசாய கல்லுாரிக்கு அருகிலுள்ள நெல்லியேந்தல்பட்டி வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகம், அரசு இயந்திர கலப்பை பணிமனையில் பயிற்சி நடத்தப்படுகிறது. மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகரைச் சேர்ந்தவர்கள் 94436 77046 ல் தொடர்பு கொள்ளலாம்.