உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பஸ் டெப்போ முன் வாயில் கூட்டம்

பஸ் டெப்போ முன் வாயில் கூட்டம்

திருமங்கலம்: போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளனம் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் சம்மேளனம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருமங்கலம் பஸ் டெப்போ முன்பு வாயிற் கூட்டம் நடந்தது.கூட்டத்தில் மத்திய சங்க துணைச் செயலாளர் ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். திருமங்கலம் கிளை தலைவர் ஜெய்சங்கர் தலைமை வகித்தார். செயலாளர் ராமச்சந்திரன், மூர்த்தி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.போக்குவரத்து துறையின் வரவு செலவுக்கான வித்தியாச தொகையை பட்ஜெட்டில் அரசு நிதி ஒதுக்க வேண்டும். தொழிலாளர்களுடன் ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனே துவக்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கான தொகையை உடனே வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் 103 மாத அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஒப்பந்த முறையை கைவிட்டு வாரிசு முறையை உடனே அனுப்ப வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !