உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாணவர்களுக்கு பரிசளிப்பு

மாணவர்களுக்கு பரிசளிப்பு

பெருங்குடி : மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரியில் விரிவாக்க நடவடிக்கை குழு சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழா போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.பேச்சுப் போட்டியில் வேதியியல் துறை மாணவி ஹேமலதா முதல் பரிசு, கட்டுரை போட்டியில் ஆங்கிலத்துறை மாணவி கனிமொழி முதல் பரிசு, வினாடி வினா போட்டியில் வேதியியல் துறை மாணவர் சிவராமன் முதல் பரிசு பெற்றனர். அரசின் சார்பில் தலா ரூ. 2 ஆயிரம் பரிசை முதல்வர் சந்திரன் வழங்கினார். பேராசிரியர்கள் தமீம் அசாருதீன், சுப்பிரமணியன், ராமகிருஷ்ணன், மீனா நடுவர்களாக இருந்தனர். குழுத் தலைவர் விஜயகுமார் ஏற்பாடுகள் செய்தார். பேராசிரியர் மோகன்தாஸ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை