| ADDED : ஆக 05, 2024 05:39 AM
உசிலம்பட்டி: கருமாத்துாரில் ஆடிப்பெருக்கு தினத்தில் தாய்மாமன்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.உசிலம்பட்டி பகுதி மக்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிப்பவர் தாய்மாமன்கள். ஆடிப் பெருக்கு தினத்தில் சகோதரிகளின் குடும்பத்திற்கு ஆடிச் சீதனமும், விதைமணிகளையும் வழங்கும் பாரம்பரியம் இங்குண்டு. இந்த தாய்மாமன் பங்களிப்பை பெருமைப்படுத்தும் விதமாக ஆடி 18 தினத்தில் அவர்களுக்கு மரியாதை செலுத்தி ஆசி பெறும் நிகழ்ச்சி கருமாத்துார் கோட்டை மந்தை கருப்பசாமி கோயிலில் நடந்தது.தாய்மாமன்களுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்து, தாய்மாமனிடம் தானியங்களை மருமகன்மார்கள் பெற்று ஆடிப் பெருக்கில் விதைப்புக்காக விதையை எடுத்து சென்றனர். இந்நிகழ்ச்சியில் தேனி எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் தி.மு.க., வினர், தென்னிந்திய பா.பி., திருமாறன் உள்பட பலரும் பங்கேற்றனர்.