உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் இருக்காது: பிரகாஷ் காரத் பிரகாஷ் காரத் பேச்சு

மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் இருக்காது: பிரகாஷ் காரத் பிரகாஷ் காரத் பேச்சு

மதுரை : ''பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா ஜனநாயக நாடாக இருக்காது,'' என மதுரை லோக்சபா தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து நடந்த பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் பேசினார்.அவர் பேசியதாவது: இந்தியாவில் மதச்சார்பின்மை, ஜனநாயகம்நீடிக்குமா என்பதற்கு பதில் சொல்ல வேண்டிய தேர்தல் இது. பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இதுஜனநாயக நாடாக இருக்காது. மத்திய அரசின் விசாரணை அமைப்புகள்மூலம் எதிர்க்கட்சித் தலைவர்கள் வேட்டையாடப்படுகின்றனர். அம்பேத்கர் உருவாக்கியஅரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி, மனுவாத அடிப்படையில் ஹிந்துத்துவாவிற்கான பிற்போக்கான சட்டமாக மாற்ற பா.ஜ., முயற்சிக்கிறது.தேர்தல் பத்திர திட்டம்சுதந்திர இந்தியாவின் பெரிய ஊழல். இதன் மூலம் பா.ஜ.,விற்கு ரூ.8 ஆயிரத்து 252 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. பலரை மிரட்டி நன்கொடை பெற்ற மோசடி குறித்து உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும். மாநில உரிமை, கூட்டாட்சி கோட்பாட்டை காலில் போட்டு பா.ஜ.,மிதிக்கிறது. தமிழக வெள்ள பாதிப்பிற்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை. பிரிட்டிஷ் ஆட்சியின் வைஸ்ராய்போல் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மாநில அரசின் நிர்வாகத்தில் தலையிட்டு முடக்குகிறார் என்றார். தி.மு.க.,-எம்.எல்.ஏ., தளபதி, கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்