உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பணம் செலுத்தியும் வெளிச்சம் வரல

பணம் செலுத்தியும் வெளிச்சம் வரல

மேலுார்: மேலுார் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்செயற்பொறியாளர் கண்ணன் தலைமையில் நடந்தது. இதில் நாவினிபட்டி ஊராட்சி தலைவி தவுலத்பீவி புகார் கொடுத்தார். அதில் நா.கோவில்பட்டி மற்றும் 6 வது வார்டு உள்ளிட்ட இரண்டு இடங்களில் மின்கம்பம் ஊன்றி தெருவிளக்கு அமைக்க கோரி ஊராட்சி சார்பில் 2023 அக்., 9 மின்வாரிய அலுவலகத்தில் ரூ.96 ஆயிரத்து 100 செலுத்தப்பட்டது. தெருவிளக்குகள் அமைக்கவில்லை. பொருட்கள் இல்லை என அலைக்கழிக்கின்றனர். டிரான்ஸ்பார்மர் மாற்றக்கோரி மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை' என தெரிவிக்கப்பட்டிருந்தது.செயற்பொறியாளர் கண்ணன் உடனடியாக தெருவிளக்குகள் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி