வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தேவையான சேவை
மதுரை: மதுரை அரசு மருத்துவமனை மனநலத்துறை சார்பில் 'கலங்கரை' எனப்படும் ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தை அமைச்சர் தியாகராஜன் துவக்கி வைத்தார்.கலெக்டர் சங்கீதா, மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி கமிஷனர் சித்ரா, எம்.எல்.ஏ.,க்கள் தளபதி, பூமிநாதன், மருத்துவமனை ஆர்.எம்.ஓ.,க்கள் சரவணன், முரளிதரன், மனநல டாக்டர்கள் அமுதா, தீபா, கிருபாகர கிருஷ்ணன் கலந்து கொண்டனர்.டீன் அருள் சுந்தரேஷ்குமார், துறைத்தலைவர் கீதாஞ்சலி கூறியதாவது: பெண்கள், குழந்தைகளுக்காக 10 படுக்கைகளுடன் கூடிய வார்டு உள்ளது. தற்போது கூடுதலாக 20 படுக்கைகளுடன் கூடிய ஆண்கள் வார்டு அமைக்கப்பட்டுள்ளது.மருந்துகளுடன் குழு சிகிச்சை, தனிநபர் ஆலோசனை, யோகா பயிற்சி, குடும்ப ஆலோசனை வழங்கப்படுகிறது. இதற்கென இரு டாக்டர்கள் உள்ளனர். நர்ஸ், மனநல ஆலோசகர், சமூகப்பணியாளர், பல்நோக்கு பணியாளர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். பிற உடல்நல பிரச்னை இல்லாதவர்கள் இந்த வார்டில் உறவினர்கள் துணையின்றி தங்கி சிகிச்சை பெறலாம். நோயாளிகள் மன இறுக்கத்தை தவிர்க்கும் வகையில் கேரம், செஸ் விளையாடலாம். 'டிவி'யும் பார்க்கலாம். மது, சிகரெட், புகையிலை, கஞ்சா, போதை மாத்திரை, சமூக வலைதள விளையாட்டுகளுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மூன்று வேளை உணவும் வழங்கப்படுகிறது. குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்த 4600 பேருக்கு 2024 ல் சிகிச்சை அளித்துள்ளோம். குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஒரு பெண்ணுக்கும் சிகிச்சை அளித்து வருகிறோம் என்றனர்.
தேவையான சேவை