உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணியில் சுணக்கம் இல்லை; நிர்வாக இயக்குநர் ஹனுமந்தராவ் உறுதி

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணியில் சுணக்கம் இல்லை; நிர்வாக இயக்குநர் ஹனுமந்தராவ் உறுதி

மதுரை, : மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணியில் சுணக்கம் இல்லை என நிர்வாக இயக்குநர் ஹனுமந்தராவ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கை: மதுரை தோப்பூரில் மார்ச் 2024ல் எய்ம்ஸ் கட்டுமான பணி துவங்கியது. ஏற்கனவே தெரிவித்த படி கட்டுமானம் தொடங்கியதில் இருந்து 18 மாதங்களுக்குள் முதற்கட்டமாக மருத்துவக்கல்லுாரி, அவசர சிகிச்சை பிரிவு, உள், வெளி நோயாளிகளுக்கான வார்டு, மாணவர்களுக்கான விடுதிகள் கட்டி முடிக்கப்படும். இப்பணிகளில் தாமதமோ சுணக்கமோ இல்லை. மத்திய அரசு நிதியுதவி, தொழில்நுட்ப ஆலோசனை வழங்குகிறது.எய்ம்ஸ் மாணவர்கள் தற்போது ராமநாதபுரம் மருத்துவக் கல்லுாரியில் பயில்கின்றனர். கல்விச் சூழலுக்காக நாக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பயிற்சிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். விடுதியில் இடப்பற்றாக்குறையால் புதிய பேட்ச் மாணவர்கள் ராமநாதபும் தனியார் விடுதிகளில் தங்கவைக்கப்படுவர்.மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 183 பணியிடங்கள் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிரப்பப்பட்டுள்ளன. கட்டுமானம் முழுமையடைந்து மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும் போது மீதிப் பணியிடங்கள் நிரப்பப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

venugopal s
ஆக 15, 2024 17:33

இவர்களுக்கு இப்படி காமெடி பண்றதே வேலையாப் போச்சு!


அப்பாவி
ஆக 15, 2024 13:37

அதான் ஏற்கனவே 99 சதவீதம் காட்டியாச்சே. கட்டுனதையே திரும்ப கட்டுவாங்களா? முருகரும், நட்டாவும் ஆய்வு செய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை