உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மோடியின் ஊழலற்ற நல்லாட்சி தொடர வேண்டும்: அ.ம.மு.க., தினகரன் பேச்சு

மோடியின் ஊழலற்ற நல்லாட்சி தொடர வேண்டும்: அ.ம.மு.க., தினகரன் பேச்சு

உசிலம்பட்டி: மோடியின் ஊழலற்ற நல்லாட்சி தொடர வேண்டும்; அப்போது வளர்ச்சிப்பணிகள் இன்னும் நடக்கும்' என உசிலம்பட்டியில், தேனி தொகுதி அ.ம.மு.க.,வேட்பாளர் தினகரன் பேசினார்.அவர் பேசியதாவது:மோடி குஜராத்தில் முதல்வராக இருந்த போது செய்த நல்ல பணிகளால் தான் அவர் பிரதமராக வந்தார். நல்ல மக்கள் பிரதிநிதியாக, நல்ல அரசியல்வாதியாக செயல்பட்டால் மக்கள் வரவேற்பார்கள். நான் தஞ்சாவூரில் பிறந்தவன். எனக்கு தேனி மக்கள் ஆதரவு தந்தனர். தற்போது 15 ஆண்டுகள் கழித்து வருகிறேன். அதே ஆதரவு தருகின்றனர். இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெல்லும். மோடி மூன்றாவது முறை பிரதமரான பிறகு இந்தப்பகுதிக்கு தேவையான வளர்ச்சிப்பணிகள் கிடைக்கும். அதற்காக என்னை வெற்றி பெறச்செய்ய வேண்டும்.தி.மு.க., வேட்பாளர் ஏதாவது பேசுவார். அவர் பாட்டுக்கு பேசட்டும். விரக்தியின் விளிம்பில் இருக்கிறார். அவர் பாட்டுக்கு பேசிட்டு மரத்தில, சுவத்தில முட்டிக்கிடட்டும். அதையெல்லாம் கண்டுக்காதீங்க. நமது தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதற்காக சில நாட்களுக்கு வேலைகளை ஒத்தி வைத்து விட்டு நமது அணி வெற்றி பெற பாடுபடுங்கள் என பேசினார்.முன்னதாக உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், மூக்கையாத்தேவர் சிலைகளுக்கு கூட்டணி கட்சியினருடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை