உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பெண் வயிற்றுக்குள் பஞ்சு ரோல் வைத்து அலட்சிய ஆப்பரேஷன் ரூ.25 லட்சம் இழப்பீடு

பெண் வயிற்றுக்குள் பஞ்சு ரோல் வைத்து அலட்சிய ஆப்பரேஷன் ரூ.25 லட்சம் இழப்பீடு

மதுரை : திருச்சியில் பெண்ணின் வயிற்றுக்குள் பஞ்சு ரோல் வைத்து அலட்சியமாக ஆப்பரேஷன் செய்த தனியார் மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க மாநில நுகர்வோர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.திருச்சி மணப்பாறையைச் சேர்ந்த 30 வயது இளம் பெண் வயிற்று வலிக்காக 2016ல் அப்பகுதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவருக்கு கர்ப்பப்பையில் நீர்க்கட்டி இருந்ததாக கூறி ஆப்பரேஷன் செய்து நீர்க்கட்டி அகற்றப்பட்டது. அவர் மீண்டும் வயிற்று வலியால் அவதியுற்றார்.அவர் திருச்சி பெல் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தில் அவரது வயிற்றுக்குள் பஞ்சு ரோல் இருந்தது தெரிந்தது. முன் சிகிச்சை பெற்ற தனியார் மருத்துவமனையில் அவரது சம்மதம் இன்றி கர்ப்பப்பையும் அகற்றப்பட்டது தெரிந்தது. பெல் மருத்துவமனையில் வயிற்றுக்குள் இருந்த பஞ்சு ரோல் அகற்றப்பட்டது.பெண் குடும்பத்தினர் ரூ. 99 லட்சம் இழப்பீடு வழங்க கோரி மாநில நுகர்வோர் குறைதீர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். கருப்பையா தலைமையிலான நீதிபதிகள் முன்னிலையில் விசாரணை நடந்தது. தனியார் மருத்துவமனை டாக்டர்கள் அலட்சியமாக இருந்து நோயாளியின் உடலில் பஞ்சு ரோலை வைத்து ஆப்பரேஷன் செய்து பெண்ணின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் நடந்து கொண்டது உறுதி செய்யப்பட்டது. அனுமதியின்றி கர்ப்பப்பை அகற்றியதும் உறுதியானது. இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை