மேலும் செய்திகள்
நெல்லைக்கு சிறப்பு ரயில்
7 hour(s) ago
ரயில்வே ஆலோசனை குழுவுக்கு கவுரவ ஊதியம்
7 hour(s) ago
மதுரை: மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் அட்மா திட்டத்தின் மூலம் சேடபட்டி செல்லாயிபுரத்தில் பயிர்களுக்கான ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் சமச்சீர் உரப்பயன்பாடு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.வேளாண் உதவி இயக்குநர் ராமசாமி பேசுகையில், ''காரீப் பருவ பயிர்களுக்கு மஞ்சள் வண்ணஅட்டை, விளக்கு, இனக்கவர்ச்சி பொறியுடன் இயற்கை உரம் பயன்படுத்த வேண்டும்'' என்றார்.துணை வேளாண் அலுவலர் பாண்டியன், வேளாண் அலுவலர்கள் ஆமினம்மாள், ேஷாபனா, இயற்கை வேளாண் பயிற்றுநர் கருணாகரன், அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் கணேசராஜா பேசினர். ஏற்பாடுகளை உதவி தொழில் நுட்ப மேலாளர் சத்யா செய்திருந்தார். உதவி அலுவலர் முத்தையா நன்றி கூறினார்.
7 hour(s) ago
7 hour(s) ago