உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பங்குனி உற்ஸவம்

பங்குனி உற்ஸவம்

அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் அருகே செல்லணக்கவுண்டம்பட்டியில் முத்தாலம்மன் கோயில் பங்குனி உற்ஸவ விழா நாட்கள் நடந்தது. முதல் நாள் கிராமத்தில் இருந்து வாணவேடிக்கை, மேளதாளத்துடன் அலங்காநல்லுார் சென்று பூப்பல்லக்கில் அம்மனை கோயிலுக்கு அழைத்து வந்தனர். முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. 2ம் நாள் பக்தர்கள் பொங்கல் வைத்து, கிடா வெட்டி சிறப்பு வழிபாடு செய்தனர். அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. மலர் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. அம்மன் பூஞ்சோலை சென்றபின் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ