உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / காப்பீடு திட்டத்தை அரசே ஏற்க ஓய்வூதியர் வலியுறுத்தல்

காப்பீடு திட்டத்தை அரசே ஏற்க ஓய்வூதியர் வலியுறுத்தல்

மதுரை : மருத்துவ காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்' என ஓய்வூதியர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.மதுரையில் அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க வட்டக்கிளை பேரவை கூட்டம் நடந்தது. தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். செயற்குழு உறுப்பினர் சீத்தாராமன் வரவேற்றார். மாநில பொருளாளர் ஜெயச்சந்திரன், துணைத் தலைவர் தங்கவேலு, மாவட்ட செயலாளர் பால்முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 70 வயதை தாண்டியவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.7850 ஓய்வூதியம் வழங்க வேண்டும். தொகுப்பு ஓய்வூதியத்தை (கம்யூட்டேஷன்) 15 ஆண்டுகளில் இருந்து 12 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைத் தலைவர் ராமசாமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை