சாட்டை துரைமுருகன் முன்ஜாமின் மனு
மதுரை: திருச்சி எஸ்.பி.,வருண்குமார். இவர் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதுாறான கருத்துக்கள் பதிவிட்டதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட சிலர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். சாட்டை துரைமுருகன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தார். நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி விசாரித்தார். அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. நீதிபதி இன்று (ஆக.,30) ஒத்திவைத்தார்.