உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குரு பகவான் கோயிலில் பழனிசாமி பெயரில் பூஜை

குரு பகவான் கோயிலில் பழனிசாமி பெயரில் பூஜை

சோழவந்தான்: சோழவந்தான் அருகே குருவித்துறையில் அ.தி.மு.க., சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் உதயகுமார் திறந்து வைத்தார். குரு பகவான் கோயிலில் முன்னாள் முதல்வர் பழனிசாமி பெயரில் சிறப்பு பூஜை செய்தார்.அவர் கூறுகையில், ''அ.தி.மு.க., ஆட்சியில் குடிமராமத்து திட்டம் மூலம் மழைநீர் சேகரிக்கப்பட்டு நிலத்தடி நீர் உயர்ந்தது. தற்போது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் 3 ஆண்டுகளாக திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளனர். குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. தமிழக மக்களின் நலனை பற்றி கவலைப்படாமல் முதல்வர் ஸ்டாலின் கொடைக்கானலில் கோல்ப் விளையாட்டு விளையாடுகிறார்'' என்றார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், கருப்பையா, ஒன்றிய செயலாளர் கணேசன், ராஜா, நிர்வாகிகள் ராஜேஷ்கண்ணா, சோலை ரவி உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை