உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / புட் போர்டு மாணவர்களை கண்டித்த ஏட்டு மீது தாக்கு

புட் போர்டு மாணவர்களை கண்டித்த ஏட்டு மீது தாக்கு

திருமங்கலம்: மதுரை மாவட்டம், திருமங்கலம், கற்பக நகரைச் சேர்ந்தவர் அழகர்சாமி, 44; பெருங்குடி போலீஸ் ஏட்டு. நேற்று முன்தினம் மாலை திருமங்கலத்திலிருந்து விமான நிலைய ரோடு வழியாக ஓ.ஆலங்குளத்திற்கு சென்ற டவுன் பஸ்சில், பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி சென்றனர்.அப்போது, டூ - வீலரில் வந்த அழகர்சாமி, படியில் தொங்கிய மாணவர்களை கண்டித்து உள்ளே செல்லுமாறு கூறினார். மாணவர்கள் உள்ளே சென்றபின் பஸ் கிளம்பியது. இந்நிலையில், போலீஸ்காரர் தங்களை திட்டியதாக மாணவர் ஒருவர் தன் அப்பா ராமரிடம் தெரிவித்தார்.ஆத்திரமடைந்த ராமர், டூ - வீலரில் வந்த அழகர்சாமி மீது, தன் டூ - வீலரால் வேகமாக மோதி கீழே தள்ளி, ராமரை கொல்ல முயற்சித்தார். காயமடைந்த ஏட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை