உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விருதுநகர் தொகுதி எனக்கு புதிது அல்ல திருப்பரங்குன்றத்தில் ராதிகா பிரசாரம்

விருதுநகர் தொகுதி எனக்கு புதிது அல்ல திருப்பரங்குன்றத்தில் ராதிகா பிரசாரம்

''விருதுநகர் தொகுதி எனக்கு ஒன்றும் புதிது அல்ல. இத்தொகுதியில் நிறைய பணிகளை செய்யாமல் விட்டு விட்டார்கள். அதையெல்லாம் சிறப்பாக செய்து முடிப்போம்,'' என, விருதுநகர் தொகுதி பா.ஜ., வேட்பாளர் ராதிகா உறுதியளித்தார்.இத்தொகுதிக்குட்பட்ட மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கணவர் சரத்குமாருடன் ராதிகா தரிசனம் செய்தார். பின் கட்சி அலுவலகத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சி முடிந்ததும் திறந்த வேனில் பிரசாரத்தை ராதிகா துவக்கினார்.அவர் பேசியதாவது: விருதுநகர் தொகுதியில் பா.ஜ., வேட்பாளராக முதல் முறையாக போட்டியிடுகிறேன். திருப்பரங்குன்றம் கோயிலில் தரிசனம் செய்து பிரசாரத்தை துவக்கியதில் மகிழ்ச்சி. தொகுதி பிரச்னைகளை தீர்க்க என்னை லோக்சபாவிற்கு அவர்கள் பிரதிநிதியாக மக்கள் அனுப்புவர்.பா.ஜ., தமிழக தலைவர் அண்ணாமலை எப்படி உற்சாகமாக பணிபுரிகிறாரோ அதைவிட பல மடங்கு தொண்டர்கள் பணியாற்ற வேண்டும். விருதுநகர் தொகுதியில் நிச்சயமாக போட்டி இருக்கும். அது என்ன போட்டி என்பதை போகப்போக பாருங்கள்.விருதுநகரில் முன்னாள் முதல்வர் காமராஜருக்கு மணி மண்டபம் கட்ட என் கணவர் பெரிய முயற்சி மேற்கொண்டுள்ளார். இதுவே காமராஜருக்கு நாங்கள் காட்டும் மரியாதை. அதை நிச்சயம் முடிப்போம். காமராஜர் வழியில்தான் நாங்கள் நடக்கிறோம் என்றார்.சரத்குமார் கூறியதாவது: இத்தொகுதிக்கு நல்லது செய்ய வேண்டும். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் முதல்முறையாக பா.ஜ.,வில் தன்னை இணைத்துக் கொண்டு சேவை செய்ய ராதிகா வந்திருக்கிறார். பிரதமர் மோடி மற்றும் பா.ஜ., மீது நம்பிக்கை வைத்து இணைந்து பணிபுரிவது மிகுந்த மகிழ்ச்சி என்றார்.விருதுநகரில் ராதிகா கூறியதாவது: இந்த களம் பிரதமர் மோடிக்கானது. பத்தாண்டுகளாக அவர் என்ன செய்துள்ளார் என பார்த்து மக்கள் ஓட்டளிப்பர். பெட்ரோல் விலை குறைப்பதாக தி.மு.க., கூறியது டைப்பிங் பிழையா என தெரியவில்லை. முடியாதை சொல்வதற்காக திட்டத்தை வகுத்து கொண்டிருக்கின்றனர். மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வராது என்ற உறுதியில் இதை வாக்குறுதியாக அளித்துள்ளனர். பா.ஜ., ஆளும் மாநிலங்களில் வரியை குறைத்து விட்டு பெட்ரோல் விலையை குறைத்துள்ளனர். அதை ஏன் தமிழக அரசு செய்யவில்லை. திருமங்கலம் பார்முலா அன்றைய காலகட்டத்தில் இருந்தது. இரு திராவிட கட்சிகளுமே தான் பணநாயகம் செழிக்க காரணம். இந்த தேர்தலில் பணநாயகம் வெல்லாது. பணம் கொடுத்து மக்களை ஏமாற்றுவதை விட சிறந்த ஆட்சியை கொடுக்க வேண்டும். பா.ஜ.,வில் இணைந்ததால் ச.ம.க., நிர்வாகிகள் அதிருப்தியில் இல்லை. பட்டாசு தொழிலுக்கான தீர்வு குறித்து பலரிடம் கருத்து கேட்டு வருகிறோம். இனி பட்டாசு விபத்தால் ஒரு இறப்பும் ஏற்படாது என வாக்குறுதி கொடுக்கிறேன், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













புதிய வீடியோ