உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 2 மாதம் தண்ணீர் வழங்க தீர்மானம்

2 மாதம் தண்ணீர் வழங்க தீர்மானம்

மேலுார்: மேலுாரில் முல்லை பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் தலைவர் முருகன் தலைமையில் நடந்தது. செயலாளர் ரவி, பொருளாளர் ஜெயபால் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், 60 நாட்கள் தொடர்ந்து தண்ணீர் வழங்க வேண்டும். 60 நாள் முறைபாசனத்தில் திறக்க வேண்டும். கள்ளந்திரி, புலிப்பட்டி தேக்கத்தில் உள்ள குறைபாடுகளை சரி செய்து உரிய அளவு தண்ணீரை திறக்க வேண்டும். பிரதான மற்றும் கிளை கால்வாய்களை துார்வாரியும், மடை மற்றும் ஷட்டர்களை சரி செய்ய வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விவசாயிகள் கிருஷ்ணன், இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை