உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பணி ஓய்வு பாராட்டு விழா

பணி ஓய்வு பாராட்டு விழா

மதுரை : மதுரை சகாயம் நட்பு வட்டம் சார்பில் அரசுத்துறையில் நேர்மையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.அரசு மருத்துவமனை சிறுநீரகவியல் அறுவை சிகிச்சை துறைத்தலைவர் ஞானசேகரன் தலைமை வகித்தார். நட்பு வட்ட ஒருங்கிணைப்பாளர் ராகவன் முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற மதுரை காமராஜ் பல்கலை பேராசிரியர் வெங்கடாசலம், ஒத்தக்கடை கூட்டுறவு நகர கடன் சங்க செயலாளர் ஆசிரியதேவன், சக்கிமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் உபயதுல்லா ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் பாலசுப்ரமணியன், ஹிந்து மஸ்துார் சபா மாவட்ட செயலாளர் கணேசன், பாரத ஸ்டேட் வங்கி ஓய்வு பெற்றோர் நலச்சங்க மாவட்ட தலைவர் மீனாட்சிசுந்தரம், மக்கள் பாதை இயக்க ஒருங்கிணைப்பாளர் அமுதா ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி