உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சாலைப்பணியாளர்கள் தண்டோரா ஆர்ப்பாட்டம்

சாலைப்பணியாளர்கள் தண்டோரா ஆர்ப்பாட்டம்

மதுரை: மதுரையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில் தண்டோரா முழக்கப் போராட்டம் நடந்தது. மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்ககூடாது, ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்களை நிரப்பக்கூடாது, 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக முறைபடுத்த வேண்டும், பணியாளர் பதவி மூப்பு பட்டியலில் உள்ள முறைகேடுகளை களைதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.கோட்டத் தலைவர்கள் மணிமாறன், மாரி, ராஜா, நந்தகோபால், பரமேஸ்வரன், நாகநாதன் தலைமை வகித்தனர். செயலாளர்கள் மனோகரன், முத்தையா, சீனிவாசன், பாலமுருகன், முருகேசன், திருக்கண்ணன், மாநில பொருளாளர் தமிழ், துணைத் தலைவர் ராஜமாணிக்கம் உட்பட பலர் பேசினர். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் நீதிராஜா பேசினார். பொருளாளர் முருகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி