உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆபாசமாக திட்டிய எஸ். எஸ்.ஐ.,சஸ்பெண்ட்

ஆபாசமாக திட்டிய எஸ். எஸ்.ஐ.,சஸ்பெண்ட்

மதுரை: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ வியாபாரிகள் சிலர் மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் பூக்கள் வாங்கிக்கொண்டு மினி சரக்கு வேனில் ஊருக்கு திரும்பினர். திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் போலீஸ் செக்போஸ்ட்டில் கூடல்புதுார் சிறப்பு எஸ்.ஐ., தவமணி, 'சரக்கு வேனில் ஆட்கள் செல்லக்கூடாது' என கண்டித்தார். இதுதொடர்பாக இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட விவசாயிகளை ஆபாசமாக தவமணி திட்டினார். இதுகுறித்த வீடியோ வைரலானதால் அவரை 'சஸ்பெண்ட்' செய்து கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டார். 'பொதுமக்களிடம் மரியாதைக்குறைவாக நடந்துக்கொள்ளக்கூடாது' என அனைத்து போலீசாரையும் எச்சரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி