உள்ளூர் செய்திகள்

மரக்கன்று நடல்

மதுரை : மதுரை யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பில் உலக தமிழ்ச்சங்க வளாகத்தில் மரக்கன்றுகள் நடல், பறவைகளுக்கு நீர் வைத்தல் நிகழ்வுகள் நடந்தன.ஆலோசகர்கள் கார்த்திகேயன் வரவேற்றார், பிரபு முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் தென்னவன், கவிஞர் இரா. ரவி, வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன், சமூக ஆர்வலர் அசோக்குமார் பேசினர். பறவைகளுக்கு அரசி, தானியங்கள் துாவப்பட்டு தண்ணீர் வைக்கப்பட்டது. அப்துல் கலாம் வழியில் நண்பர்கள் அமைப்பின் நிறுவனர் செந்தில், சமூக ஆர்வலர்கள் ரமேஷ், சசிகுமார், பரமேஸ்வரன் பங்கேற்றனர். குழந்தைகள் நலினா, ரித்திகா நன்றி கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்