உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மரக்கன்று நடும் பா.ஜ.,வினர்

மரக்கன்று நடும் பா.ஜ.,வினர்

மதுரை: பிரதமர் மோடி சமீபத்தில் பங்கேற்ற 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பேசுகையில், 'ஒவ்வொருவரும் தங்கள் தாய் பெயரில் ஒரு மரக்கன்று நட வேண்டும்' என கேட்டுக் கொண்டார். இதையடுத்து மதுரை பா.ஜ.,வினர் மரக்கன்று நட்டனர். மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் தனது வீட்டில் தாய் ருக்மணி பெயரில் வேம்பு மரக்கன்று நட்டார். இந்நிகழ்ச்சியில் ஊடகப்பிரிவு மாநில செயலாளர் நாகராஜன், திருப்பாலை மண்டல் தலைவர் அண்ணாமலை, மேற்கு ஒன்றிய தலைவர் ஜோதிமணி, விளையாட்டுப்பிரிவு மாநில தலைவர் செந்தில், விருந்தோம்பல் பிரிவு தலைவர் செந்தில் பங்கேற்றனர். இதேபோல மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் விஷ்ணுபிரசாத்தும் தனது அலுவலகத்தில் மரக்கன்று நட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை