உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கருத்துக்கணிப்பெல்லாம் ஜூஜூபி சொல்கிறார் செல்லுார் ராஜூ

கருத்துக்கணிப்பெல்லாம் ஜூஜூபி சொல்கிறார் செல்லுார் ராஜூ

மதுரை: ''கருத்துக்கணிப்பெல்லாம் ஜூஜூபி. மக்களே வெற்றியை தீர்மானிக்கின்றனர்,'' என, மதுரையில் நடந்த லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கை முகவர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ பேசினார்.முன்னாள் எம்.எல்.ஏ., அண்ணாதுரை தலைமை வகித்தார். எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் பாண்டியன், வழக்கறிஞர் சங்க செயலாளர் தமிழ்செல்வன் ஓட்டு எண்ணிக்கையன்று செய்ய வேண்டியவை குறித்து விளக்கினர். வேட்பாளர் டாக்டர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ பேசியதாவது: மார்க்சிஸ்ட் கம்யூ., முதல் நாளே துண்டு போடும் கட்சி. ஓட்டு எண்ணப்படும் நாளன்று தாமதமின்றி அதிகாலை முகவர்கள் செல்ல வேண்டும். கவனமாக பணிகளை மேற்கொண்டால் போதும். தேர்தல் பிரசாரத்தின் போது மக்கள் மகிழ்ச்சியுடன் வேட்பாளர் சரவணனை வரவேற்றார்கள். மார்க்சிஸ்ட் கம்யூ., வேட்பாளர் 5 ஆண்டுகள் எதுவுமே செய்யவில்லை. முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு மதுரை தொகுதியில் தான் அதிகமான வரவேற்பை மக்கள் வழங்கியுள்ளார்கள்.கருத்துக்கணிப்பெல்லாம் ஜூஜூபி. இதை கண்டு அஞ்சக்கூடாது. மக்களே நீதிமான்கள். மத்தியில் பா.ஜ., மாநிலத்தில் தி.மு.க., அரசுகளை துணிந்து எதிர்த்து நிற்கிறது அ.தி.மு.க., என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி