உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கடத்தல் தங்கம் மீட்பு

கடத்தல் தங்கம் மீட்பு

மதுரை: மதுரை விமான நிலையம் வந்த துபாய் விமானத்தில் ரூ.49 லட்சம் மதிப்புள்ள 812 கிராம் கடத்தல் தங்கம் மீட்கப்பட்டது.துபாயிலிருந்து மதுரை வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.அப்போது நாகப்பட்டினத்தை சேர்ந்த அப்துல்லா மகன் முகமது அபுபக்கர் 33, சந்தேகப்படும் வகையில் நடந்துகொண்டார். அவரது உடைமைகளை அதிகாரிகள் சோதித்தபோது அவரிடம் கணக்கில் வராத 812 கிராம் தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 48 லட்சத்து 78 ஆயிரம். தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு அபுபக்கரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை