| ADDED : ஆக 01, 2024 11:28 PM
மதுரை : நாளை (ஆக. 3) ஆடிப்பெருக்கை முன்னிட்டு மதுரை தங்கமயில் ஜூவல்லரியில் காலை 6:00 மணி முதல் சிறப்பு விற்பனை துவங்குகிறது.தமிழகத்தில் 59கிளைகளுடன் செயல்படும் இந் நிறுவனத்தில் 2200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். இங்கு நாளை ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு நகைகள் வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வேதம் கற்ற ஆச்சாரியர்களால் சிறப்பு பூஜை செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆடிப்பெருக்கு சிறப்புகள்
ஆடிப்பெருக்கு அன்று கட்டடம் கட்ட பூமி பூஜை செய்வது, வியாபாரம் தொடங்குவது, வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவது போன்றவை விசேஷமாக உள்ளது. இந்நாளில் தங்கம், வைரம், வெள்ளி போன்ற ஐஸ்வர்யம் நிறைந்த பொருட்களை வாங்கினால் பல்கி பெருகும் என்பது ஐதீகம். இதையொட்டி தங்கமயில் நிறுவனத்தில் தங்கம் வாங்கும் வாடிக்கையாளருக்கு கிராமுக்கு ரூ.200 வரை தள்ளுபடி அளிக்கப்படும். வெள்ளிக்கு கிலோ ரூ.4000 வரை தள்ளுபடி அளிக்கப்படும். வைரம் காரட்டிற்கு ஒரு கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். தங்கமயில் நிறுவனத்தில் நுாறு சதவீதம் 'ஹால்மார்க் யுனிக் ஐடென்டிபிகேஷன்' (HUID) தங்க நகைகள் மட்டுமே விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.