உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / புள்ளிமான் மீட்பு

புள்ளிமான் மீட்பு

திருமங்கலம், : திருமங்கலம் மேலக்கோட்டை ஹவுசிங் போர்டு காலனி பகுதியில் நேற்று காலை உணவு தேடி நான்கு வயது மதிக்க ஆண் புள்ளிமான் வந்தது. இந்த புள்ளிமானை நாய்கள் துரத்தி கடித்தன. காயம் அடைந்த மான், அப்பகுதியில் பாண்டி என்பவர் வீட்டில் பதுங்கியது. பொதுமக்கள் புள்ளிமானை பிடிக்க முயன்ற போது அது காம்பவுண்ட் சுவரை தாண்டி ஓடியது. இந்த மானை பொதுமக்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் மானுக்கு சிகிச்சை அளித்து காட்டில் விடுவதற்காக கொண்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ