உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குடிமகன்களால் மாணவிகள் அவதி

குடிமகன்களால் மாணவிகள் அவதி

பேரையூர் : பேரையூர் - சிலைமலைப்பட்டி மாநில நெடுஞ்சாலையில் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது.இச்சாலையில் போக்குவரத்து அதிகம் உள்ளது. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவியர் பலநுாறு பேர் பேரையூர் பள்ளிக்கு சைக்கிளில் சென்று வருகின்றனர். அரசு பள்ளிக்கூடம் செல்லும் வழியில் டாஸ்மாக் கடை உள்ள இந்தச் சாலையில் வரும் வாகனங்களை குடிமகன்கள் ஓரம் கட்டி விட்டு, மது வாங்கி செல்கின்றனர்.இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. அப்பகுதி பெண்கள் அவதிக்கு ஆளாகின்றனர். மதுவுக்கு அடிமையான குடிமகன்களால், மாணவிகள் வீடு திரும்பும்போது அச்சத்துடன் செல்கின்றனர். பொதுமக்கள் அனைவருக்கும் சிரமம் தரும் இந்த டாஸ்மாக் கடையை இடம் மாற்ற மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி