உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தேனீ பெட்டிகள் வழங்கல்

தேனீ பெட்டிகள் வழங்கல்

பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி சார்பில் மத்திய அரசின் உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் பெண்களின் வாழ்வாதாரம் மற்றும் சுற்றச் சூழலை மேம்படுத்தும் நோக்கில், கூடக்கோவில் 5 மகளிர் சுய உதவி குழுவினருக்கு 25 தேனீ வளர்ப்பு பெட்டிகள், தேனீக்கள், தேன் பிரித்தெடுக்கும் கருவிகள் வழங்கப்பட்டன. முதல்வர் சுந்திரன், ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி வழங்கினர். நாடார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கலைராணி, ஊராட்சி செயலாளர் ரமேஷ், கூட்டுறவு வங்கி செயலாளர் முனீஸ்வரன், வனத்துறை சதீஷ், பேராசிரியர் தமீம் அசாருதீன், திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் விஜயகுமார் பங்கேற்றனர். புளூ கிளப் உரிமையாளர் பீம்சிங் தேனீ வளர்ப்பு குறித்து விளக்கம் அளித்தார். மாணவர் ஆதிஷ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !